தொலைதொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றைக்கான நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. ஆதலால் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடனடியாக பல கோடி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
நிலுவை தொகையை செலுத்தும் அளவு தங்களிடம் பணம் இல்லாததால், தொலைதொடர்பு நிறுவனங்கள் கால அவகாசம் கேட்டன.
இதனால் உச்சநீதிமன்றம் இந்த நிறுவனங்களுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது, அதாவது நிலுவைத் தொகையை செலுத்த மார்ச் 2022 வரை அவகாசம் அளித்துள்ளது.

இதனால் இந்த நிலுவைத் தொகையினை செலுத்த அனைத்து நெட்வொர்க்குகளும் என்ன செய்வதென்று பல திட்டங்களை வகுத்து வருகின்றனர். வோடபோன் உடனடியாக அதன் ரீசார்ஜ் பிளான்களின் விலையினை உயர்த்தப் போவதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து ஏர்டெலும் உடனடியாக கட்டண உயர்வு குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது.
பிஎஸ்என்எல் டிசம்பர் 1 முதல் மாற்றத்தினை கொண்டுவர நினைக்கையில், தற்போது ஜியோ அதிரடியாக கட்டண உயர்வு குறித்து அறிவித்து ஷாக் கொடுத்துள்ளது.
விரைவில் ரீசார்ஜ் பிளான்களின் கட்டண உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என்று அறிவிக்க, பலரும் ஜியோ மீது கடுப்பாகிப் போய் உள்ளனர்.
ஏற்கனவே வேறு நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்கான கட்டணத்தை அறிவித்து வாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.