கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் 21 நாள் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, மற்ற பொருட்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள் பலரும் திணறி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் ஜியோ நிறுவனம் ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது. அதாவது ஏடிஎம் மூலம் ஏடிஎம் மையத்தில் ரீசார்ஜ் செய்வதே அந்தத் திட்டமாகும்.

அதாவது ஜியோ வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம் இயந்திரத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று, ஏடிஎம் கார்டினைப் பயன்படுத்தி ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கும் ஆப்ஷன்களில் ஒரு ஆப்ஷனைத் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
இந்தத் திட்டம் ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பினைப் பெற்றதாக உள்ளது. இதனை அடுத்து ஏர்டெல், பிஎஸ்.என்.எல், வோடபோன் போன்ற நெட்வொர்க்குகளும் இந்தத் திட்டத்தினை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.