கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள் பலரும் திணறி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜுக்கான வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டித்து இன்கமிங் அழைப்புகளைத் தடையில்லாமல் பெற உதவி செய்தல், ரூ. 10 இலவச டாக்டைம் போன்றவற்றினை வழங்குகிறது.
இதனைத் தொடர்ந்து ஜியோ நெட்வொர்க்கும் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு 100 நிமிட இலவச அழைப்புகள், 100 இலவச எஸ்எம்எஸ் போன்றவற்றினை வழங்குவதாய் அறிவித்துள்ளது.

மேலும், இந்த சலுகைகள் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சலுகையின் வேலிடிட்டி முடிந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இன்கம்மிங் வாய்ஸ் கால்களைப் பெறமுடியும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாத பலருக்கு ஏடிஎம் மூலம் ரீசார்ஜ் செய்யும் சேவையினையும் ஜியோ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த முறையில் நமது ஏடிஎம் கார்டினைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் ரீசார்ஜ் செய்ய முடியும்.