Information Technology

Work From Home ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்கும் சிடிஎஸ் நிறுவனம்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே Work From Home முறையில் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக காக்னிசன்ட் ஊக்கத்தொகை வழங்குவதாய் அறிவித்துள்ளது.

அதாவது இந்தியாவில் உள்ள காக்னிசன்ட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் சம்பளத்தில் இருந்து கூடுதலாக 25 சதவிகித சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் சோர்வாக எண்ணக்கூடாது என்பதற்காக, இந்தத் திட்டத்தினை அறிவித்ததாக காக்னிசன்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் ப்ரையன் ஹஃம்ப்ரிஸ் கூறியுள்ளார்.

Work From Home ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்கும் சிடிஎஸ் நிறுவனம்

இந்தியாவில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்யும் 2,03,700 ஊழியர்களில் 1.35 லட்சம் ஊழியர்களுக்கும் மட்டுமே இந்த கூடுதல் சம்பளமானது கிடைக்கப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் ஏப்ரல் மாதம் தங்களது சம்பளத்திலிருந்து கூடுதலாக 25 சதவிகிதம் அதிகரிப்புடன் சம்பளத்தைப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற நிறுவன ஊழியர்களும் இதுகுறித்த அறிவிப்பினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

Related posts

ஏ.சி.டி அறிமுகப்படுத்தவுள்ள ஸ்டீரிம் டிவி 4கே!!

TechNews Tamil

ரூ. 2121 விலையில் அசத்தலான சலுகைகளுடன் ஜியோவின் புதிய திட்டம்!!

TechNews Tamil

ஒருநாளைக்கு 3ஜிபி டேட்டா. அதிரடியாக களமிறங்கும் பி.எஸ்.என்.எல்!

TechNews Tamil