Gadgets

கொரோனா சிகிச்சை: வயர்லெஸ் முறையில் இயங்கும் ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப்!!

கொரோனா வைரஸ் தொற்றால், உலகம் முழுவதும் 18,02,723 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,16,052 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் 9352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும், கொரோனாவுக்கு எதிராகப் போராடி, எப்படியும் தொற்றை சரிசெய்ய வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றது.

அதற்காக பலவித முறைகளில் முயற்சித்தும் வருகிறது, அந்த வகையில்  மருத்துவமனையில் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீர், உணவு மாத்திரை மருந்து போன்றவைகள் போன்றவற்றினை வழங்குவதற்கு ரோபோக்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

கொரோனா சிகிச்சை: வயர்லெஸ் முறையில் இயங்கும் ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப்!!

அந்த வகையில் ஐஐடி மும்பையை சேர்ந்த குழு ஒன்று ஸ்மார்ட் ஸ்டெத்தோஸ்கோப் சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனத்தின் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் அருகில் சென்று இதய துடிப்பை பரிசோதிக்க வேண்டியதில்லை.

அதாவது நோயாளிகளின் இதய துடிப்பு சத்தமானது வயர்லெஸ் முறையில் மருத்துவருக்கு ப்ளூடூத் மூலம் அனுப்பப்படுகிறது. கொரோனா தொற்றால் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு வருகையில், இந்தநேரத்தில் இந்த ஸ்டெத்தாஸ்கோப் அவசியமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்த சாதனம் மூலம் நோயாளியின் மருத்துவ குறிப்பு சேகரிக்கப்பட்டு, இதனை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சமீபத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்க எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் ஒன்றை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் முதன்முறையாக போல்ட் இயர்போன் அறிமுகம்.!

TechNews Tamil

இந்தியாவில் களமிறங்கிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல்!!

TechNews Tamil

32′ இன்ச் மற்றும் 43′ இன்ச் அளவுகளில் வெளியாகியுள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் X1 ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கள்!!

TechNews Tamil