கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி தற்போது வரை 3200 பேரை கொன்று குவித்ததோடு, உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. பல நாடுகளில் போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தும் பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மிக முக்கியமான பல நிகழ்வுகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.
ஐபோன் எஸ்.இ. 2, ஐபேட் ப்ரோ போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிகழ்வானது, மார்ச் 31 ஆம் தேதி நடைபெற இருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, சமீபத்தில் ஐபோன் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு விற்பனையாகிறது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உள்ள ஆப்பிள் அனைத்து கடைகளையும் மூடியது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.