Apps

கொரோனா நிவாரண நிதி: 610 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது சீன நிறுவனமான டிக் டாக்!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது  மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.

டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது. இந்த டிக் டாக் செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் 610 மில்லியன் டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் சாதாரண நிலையினை புரட்டிப்போட்டுள்ளது. வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதி: 610 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது சீன நிறுவனமான டிக் டாக்!!

இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஒருபுறம் ஒவ்வொரு நாடுகளில் நிதி திரட்டினாலும், மற்றொரு புறம் வைரஸை ஒழிக்க கடுமையான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளுக்கு உலகின் பல நிறுவனங்களும் பொருளாதார ரீதியான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவ பணியாளர்கள், பொருட்கள் மற்றும் நெருக்கடி நிவாரணங்களுக்காக 150 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக டிக் டாக் அறிவித்துள்ளது.

அதேபோல்  டிக்டாக்கின் பல்வேறு பயனர் சமூகங்களின் குழு பிரதிநிதிகளுக்கு சேவை செய்யும் அமைப்புகளுக்கு 400 கோடி வழங்குவதாகவும் டிக் டாக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பாதிக்கப்பட்ட கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாகவும் கூறியுள்ளனர். உலகெங்கிலும் தொலைதூர கற்றல் நிதிக்கு 50 மில்லியன் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் சுந்தர் பிச்சை தனது ஆல்பாபெட் நிறுவனம் சார்பில் 800 மில்லியன் டாலர் சுகாதார அமைப்புகள், சிறிய வணிகங்கள் மற்றும் கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அறிமுகமாகிறது ஜிமெயிலில் டார்க் மோட் வசதி !!

TechNews Tamil

ஓலாவின் புதிய கிரடிட் கார்டுகளுக்கு மேலும் 4% வரை தள்ளுபடி!

TechNews Tamil

சொமேட்டோ கேட்ட கேள்வி… ட்விட்டர் வாசிகளின் சிறப்பான பதில்கள்!!

TechNews Tamil