Information Technology

கொரோனா தொற்று: தமிழகத்தில் மீண்டும் மூடப்பட்ட நோக்கியா ஆலை…

கொரோனா வைரஸ் தொற்றால் உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கானது அமலில் உள்ளது, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இதனைக் கட்டுக்குள் வைக்க மருத்துவ ரீதியான தீர்வுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தத் தொற்றானது மேலும் பரவாமல் தடுக்க, தற்போதைக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் வருமுன் காப்பதுதான். மேலும் அதனைக் கருத்தில் கொண்டே சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், க்ளவுஸ் அணிதல் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது கொரோனா ஊரடங்கால் அனைத்து நாடுகளும் பெரிய அளவில் பொருளாதார இழப்பினை சந்தித்துவந்த நிலையில், ஊரடங்கினைப் படிப்படியாக தளர்த்தி வருகின்றனர்.

கொரோனா தொற்று: தமிழகத்தில் மீண்டும் மூடப்பட்ட நோக்கியா ஆலை…

அதாவது சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அந்தவகையில்  தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில்  உள்ள நோக்கியா நிறுவனமும் இயங்கி வந்தது.

தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் உள்ள நோக்கியா ஆலையில் 42 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில்,  தற்போது ஆலை மீண்டும் மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நோக்கியா ஆலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாவது, “தளர்வுகளுக்குப் பின்னர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஆலை செயல்பட்டு வந்தது. அரசு வலியுறுத்தியபடி கொரோனா தடுப்பு குறித்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினோம். கேண்டின் உட்பட பல விஷயங்களிலும் பாதுகாப்பான வழிமுறைகளையே பின்பற்றினோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

நிரந்தர Work From Home ஆப்ஷன்.. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆலோசனை!!

TechNews Tamil

ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த எஸ்பிஐயின் திட்டம்!

TechNews Tamil

‘ஈசிஜி மெஷின் இனி தேவையில்லை- ஆப்பிள் வாட்ச் போதும்..

TechNews Tamil