கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி ஏறக்குறைய 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது வரை சீனாவில் மட்டும் 3119 பேர் உயிர் இழந்துள்ளனர்.
பன்னாட்டு விமான நிலையமான சீனாவின் ஊகான் விமான நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் காட்சி அளிக்கின்றது. மேலும் சீனாவில் பல மாகாணங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மாகாணங்களாக இருந்து வருகின்றன.
ஒரே வாரத்தில் புதியதாக மருத்துவமனைகள் எழுப்பப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், சிகிச்சை அளிக்க முடியாமல் சீன அரசாங்கம் தடுமாறி வருகின்றது.

தற்போது இதுகுறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை பேஸ்புக்கில் இலவச விளம்பரமாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு மையங்கள் பேஸ்புக்குடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
அந்த வகையில் சில விழிப்புணர்வு குறித்த விஷயங்களை தற்போது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு மையங்கள் வெளியிட்டுள்ளது.
அதாவது ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள், கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களில் பாக்டீரியா போன்ற கிருமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
இதனால் பிறரின் எலெக்ட்ரானிக் பொருட்களை நாம் பயன்படுத்தக் கூடாது. மேலும் லேப்டாப் திரைகளை அவ்வப்போது, துணியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, ஹெட்செட்களை சுத்தம் செய்தல் விட வேண்டும். மேலும் மற்றவர்கள் பேசிவிட்டு தரும் மொபைல்களை நாம் துணியினைக் கொண்டு பயன்படுத்துதல் நல்லது.