கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் 21 நாள், அதாவது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, மற்ற பொருட்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள் பலரும் திணறி வருகின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்களின் ரீசார்ஜுக்கான வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளது.
இதன் மூலம் இன்கமிங் அழைப்புகளைத் தடையில்லாமல் பெற முடியும். மேலும் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குகிறது.
இந்த சலுகைக்கான வேலிடிட்டி மார்ச் 22 ஆம் தேதி ஆகும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டுள்ளார்.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்று வருகிறது.