Games

Pubg விளையாட்டுடன் தொடர்புடைய கொரோனா விழிப்புணர்வு வீடியோ!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.. உலகம் முழுவதும் 24,14,840 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,63,988 ஆக உள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் கால் பதித்த கொரோனா வைரஸ் ஆனது தற்போது தீவிரமாகியுள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,389 பேர், உயிரிழந்தோர் எண்ணிக்கை 562 ஆக உள்ளது.

Pubg விளையாட்டுடன் தொடர்புடைய கொரோனா விழிப்புணர்வு வீடியோ!!

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகாமல் இருக்க முதல் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கானது தற்போது இரண்டாவது கட்டமாக மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளையும் சிவப்பு, மஞ்சள், பச்சை என்று அலர்ட் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வினை நூதனமாக ஏற்படுத்த விரும்பிய மும்பை போலீசார் டுவிட்டரில் பப்ஜி விளையாட்டில் ரெட் ஜோன் காண்பிக்கும் போது வீரர் வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு என தெரிவிக்கப்படும். அதை தற்போது உள்ள சூழ்நிலையோடு ஒப்பிட்டு ரெட் அலர்ட் உள்ள பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நூதன விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

Related posts

பப்ஜி கேமிங்க் ஆப்: முதலாவது ஆண்டு கொண்டாட்டம்!!

TechNews Tamil

பிஎஸ்என்எல் அபிநந்தன் திட்டம்: ரூ.151/- பிளானில் திருத்தம்

TechNews Tamil

2ஜிபி ரேம் கொண்ட போன்களுக்கான ‘பப்ஜி லைட்’..!

TechNews Tamil