Apps

டிக் டாக்கிற்குப் போட்டி: பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் சோதனையில் உள்ள ரீல்ஸ் அம்சம்!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.

சமீபத்தில் டிக் டாக் செயலி போன்ற சிங்காரி செயலி அறிமுகமாகி, பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றது. அந்தவகையில் தற்போது டிக் டாக் போன்றே அம்சங்களைக் கொண்ட ஒரு செயலியானது சோதனை முறையில் இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதாவது டிக் டாக்கிற்குப் போட்டியாக வெளியாக உள்ள இந்த செயலியின் பெயர் ரீல்ஸ் அகும். அதாவது டிக்டாக்கில் உள்ளதுபோன்று பின்னணி இசையில் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி இதில் உள்ளது.

டிக் டாக்கிற்குப் போட்டி: பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் சோதனையில் உள்ள ரீல்ஸ் அம்சம்!!

இந்த இன்ஸ்டாகிராம் சோதனை ரீல்ஸ் அம்சமானது முதற்கட்ட சோதனையாக, சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, அதாவது பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது சோதனையை செய்து வருகிறது.

மேலும் இந்த அம்சமானது புது அப்டேட் இன்ஸ்டாகிராமில் கிடைக்கப்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரீல்ஸ் வசதியானது டிக்டாக்கினைப் போன்றே இருப்பதால், நிச்சயம் வெகு விரைவில் பயனர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

போலிக் கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!!

TechNews Tamil

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்: 9499 ரூபாய் வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி

TechNews Tamil

மீண்டும் துவங்கும் அமேசான் Great Indian Festival 2019 விற்பனை!

TechNews Tamil