ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 637சிப்செட் வசதியை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மையானதாக இருக்கும்.

மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாக உள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் மாடல் எண் CPH2015 ஆகும்.
மேலும் இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை,ஜிபிஎஸ், வோல்ட்இ,ä 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.