கொரோனா வைரஸ் டிசம்பர் மாதம் சீனாவில் உருவான நிலையில் 4 மாதங்களைக் கடந்த போதிலும் அதன் தீவிரம் குறைந்த பாடில்லை. இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளையும் உலுக்கி வருகின்றது.
இந்தியா மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. டிசம்பர் மாதம் உருவான இந்த கொரோனா வைரஸ் தற்போது 30 லட்சத்தினை நெருங்க உள்ளது. உலகின் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சார்ந்த விழிப்புணர்வானது தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. சமூக விலகலைக் கடைபிடித்தல், அடிக்கடி வெளியில் சென்று வருவதைத் தவிர்த்தல், சானிட்டசைர், மாஸ்க் பயன்படுத்துதல், 20 நிமிடங்கள் தேய்த்து கைகளைக் கழுவுதல் போன்றவைகள் ஆகும்.

தற்போது கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, பொறியாளர் ஒருவர் இ-சானிடைசர் பாக்ஸ் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது இதன் மூலம் சுமார் 20 நிமிடங்களில் அனைத்து நுண்ணுயிரிகளும் அழிந்துவிடும்.
அதாவது வெளியில் இருந்து வாங்கிவரும் பொருட்களை, இந்த சானிட்டசைர் சாதனத்தில் வைத்து 20 நிமிடங்கள் கழித்து எடுத்தால், இதில் உள்ள சி-ரே கதிர்வீச்சு நோய்க் கிருமிகளை அழித்துவிடும். மேலும் அசைவ உணவுகளைத் தவிர்த்து வேறு எந்தப் பொருட்களையும் இதில் வைத்து நுண்ணுயிர்களை அழிக்க முடியும்.