இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவிவந்த நிலையில், திடீரென சமீபத்தில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தநிலையில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவி வந்தநிலையில் சீன அரசின் 52 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது பொருளாதார அளவிலான வீழ்ச்சியினை சந்தித்தாலும், இந்திய மக்களின் தனியுரிமை பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்திய அரசு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் இந்தியர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினை பெற்ற டிக்டாக் செயலி, ஹலோ ஆப், ஷேர் இட் போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செயலிகள் தடைசெய்யப்பட்டதால் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.
மேலும் இந்த செயலியால் அதிக அளவிலான சீன வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், சீனர்களுக்கு இது பெருத்த அடியாக அமையும் என சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.