4 ஜியில் இருந்து 5 ஜிக்கு மாற நினைத்து ஏங்குகையில், 6 ஜி சேவை எப்போது துவங்கும் என்ற ஆவலில் பயனர்கள் இருந்துவருகின்றனர்.
உலக அளவில் எந்தநாடுகளிலும் 6 ஜி சேவையினைத் துவங்கும் ஆர்வம் இருந்தாலும், இதுவரை அதற்காக எந்தவொரு முயற்சியும் செய்யப்படவில்லை.
இந்தியாவின் கூகுள் ஸ்மார்ட்போனில் 5 ஜி சேவையினை துவக்குவது குறித்து ஆராய்ச்சிகள் செய்ய திட்டமிட்டு ஆராய்ச்சி செய்ய உள்ளதாக கூறிவந்தநிலையில், சீனாவில் இருந்து ஒரு அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சீனா 6ஜி சேவைக்கான பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் 5ஜி சேவையே சமீபத்தில் இருந்துதான் கிடைக்கப்பெற்று வருகிறது, சீனாவின் இந்த அதிரடி முடிவு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
சில நாடுகளில் மட்டுமே 5 ஜி சேவை கிடைக்கப்பெற்றுள்ளது, ஆனால் இந்தியாவில் அதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 6ஜி சேவைக்கான துவக்க பணிகளை கவனிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, ஒன்று ஆராய்ச்சியில் கவனமும் மற்றொன்று ஆலோசனை வழங்குவதில் கவனம் செலுத்தவுள்ளது.