Information Technology

உலகின் அதிக உயர 5ஜி டவர்களை அமைத்த சீனா…

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை பெருமளவு தாக்கியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து போராடியும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.  தற்போது அந்த வகையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது பல ஆயிரங்களைத் தாண்டியதாக உள்ளது.

உலகின் அதிக உயர 5ஜி டவர்களை அமைத்த சீனா…

இந்தியாவில் ஊரடங்கானது முதல் கட்டமாக 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது 15 நாட்களுக்கு மீண்டும் நீட்டித்துள்ளது. நிலைமை மோசமானால் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் பெரிய அளவில் பொருளாதார இழப்பினை சந்தித்து வருகின்றது.

உலகின் வல்லரசு நாடுகளும், பொருளாதாரப் பேரழிவினை சந்திக்கும் நிலையில் சிறிய நாடுகளின் நிலையினைச் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் சீனா கொரோனாவினைக் கட்டுப்படுத்தியதோடு, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

அந்த வகையில் தற்போது அடுத்த கட்டமாக எவரெஸ்ட் மலையில் 5ஜி டவரை நிறுவியுள்ளது, மேலும் அதை லைவ்வில் காண்பித்துள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் 5300 அடி, 5800 அடி மற்றும் 6500 அடியில் உயரத்தில் சீனா 5ஜி டவர்களை நிறுவியுள்ளது. இதன்மூலம் உலகில் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. உலக நாடுகள் பலவும் சீனாவின் மீது கடுப்பில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் வேண்டும்… மத்திய அரசிடம் மனுத்தாக்கல்!!

TechNews Tamil

ஊரடங்கு உத்தரவு: ரீசார்ஜ் செய்யத் திணறும் வாடிக்கையாளர்களுக்கு Jio கொண்டுவந்த புதிய ரீசார்ஜ் முறை!!

TechNews Tamil

மண்ணில் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினால் துளசி செடியாக வளரும் விசிட்டிங்க் கார்டு..

TechNews Tamil