2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் இந்தியாவில் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் நிலவி வந்தநிலையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 52 செயலிகளை தடை விதிக்க வேண்டும் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதனையடுத்து 2 பில்லியன் பயனர்களைக் கொண்டு இருந்த டிக்டாக் செயலி இந்தியாவில் நீக்கப்பட்டது, ஆனால் மற்றொருபுறம் பயனர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டிக் டாக் போன்ற செயலிகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் CHILL5 செயலி களம் இறக்கப்பட்டுள்ளது.
டிக் டாக்குக்கு மாற்றாக களம் இறங்கிய செயலியான CHILL5 செயலியானது தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது, மேலும் இந்த செயலியானது தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.
துவக்கத்தில் ஒரளவு வரவேற்பினைப் பெற்ற நிலையில், டிக் டாக் தடை காரணமாக தற்போது பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.