சியோமி இந்தியா தனது Mi சூப்பர் சேலை மீண்டும் அறிவித்துள்ளது. ஏற்கனவே துவங்கிய விற்பனை, ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த விற்பனை பல ஸ்மார்ட்போன்களுக்கு 8,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் Mi எக்ஸ்சேஞ்ச் உடன் 2,000 ரூபாய் தள்ளுபடி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி சலுகை சியோமி Mi A2, ரெட்மி Y3 மற்றும் போகோ F1 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு பொருந்தும். ரெட்மி நோட் 7 Pro, ரெட்மி நோட் 7S, ரெட்மி 7, ரெட்மி 7A, ரெட்மி 6, ரெட்மி 6 Pro போன்ற தொலைபேசிகள் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் Mi.com இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S-ன் விலை 9,999 ரூபாய், மற்றும் ரூ. 4GB / 64GB வகையின் விலை 11,999 ரூபாய். அதாவது ரெட்மீ நோட் 7S விலை 1,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ரெட்மீ நோட் 7 Pro 4GB RAM + 64GB சேமிப்பு வகையின் விலை 13,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவிலும் கிடைக்கும், இதன் விலை 14,999 ரூபாய் மற்றும் இந்த வரிசையில் டாப்-மாடலான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகை இந்த விற்பனை காலத்தில் 16,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெரும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் Mi.com தளத்தில் கிடைக்கப்பெறும்.
ரெட்மீ Y3 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு மாடலுக்கு 8,999 ரூபாயும், 4GB RAM + 64GB சேமிப்பு வகைக்கு 10.999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.