மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டோ டிவியானது ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
இந்த மோட்டோ டிவிக்கள் 32 இன்ச்சிலிருந்து 65 இன்ச் வரையிலுமாக உள்ளது. இந்த புதிய மோட்டோ டி.வி.க்களின் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.

தற்போது இந்த மோட்டோரோலா டி.வி. மாடல்களின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதாவது மோட்டோரோலா 32 இன்ச் ஹெச்.டி. மாடலின் விலை ரூ. 13,999 எனவும், மோட்டோரோலா 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் விலை ரூ. 24,999 எனவும், மோட்டோரோலா 43 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 29,999 எனவும், மோட்டோரோலா 50 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 33,999 எனவும், மோட்டோரோலா 55 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 39,999 எனவும், மோட்டோரோலா 65 இன்ச் அல்ட்ரா ஹெச்.டி. மாடல் விலை ரூ. 64,999 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோரோலா டி.வி.க்கள் ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றன. இதில் மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்களும் அடங்கும்.