சந்திராயன்-2 திட்டம் உலகமே அதிசயத்து இந்தியாவை திரும்பி பார்த்த திட்டமாகும்.
ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்.1 ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பல தடைகளைத் தாண்டி செலுத்தப்பட்ட இதனை நாடே இதனைக் கொண்டாடியது.
சந்திராயன்-2ல் இருந்து, ஆர்பிட்டர் வெற்றிகரமாக பிரிந்தது, லேண்டரும் வெற்றிரமாக பிரிந்து சென்றது.

விக்ரம் லேண்டர் இன்னும் சில நிமிடங்களில் நிலவின் மேற்பரப்பினை அடைந்துவிடும் என்று எத்ரிபார்த்த நிலையில், நிலவுக்கு 2.1 கி.மீ முன்னால் லேண்டருடன் இருந்த இஸ்ரோவுடனான தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய தகவல்தொடர்பு சேவையானது இழக்கப்பட்டது.
அதன்பின்னர் விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் உள்ளிட்டவைகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. லேண்டருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருக்க, ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் லேண்டர் இருக்கும் புகைப்படமும் இருந்தது.
மேலும், லேண்டர் பத்திரமாக இறங்க வேண்டிய இடத்தில் தரையிறங்கியிருந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லேண்டருக்கு ஆர்பிட்டர் வழியாகவும் மற்றும் நேரடியாக ரோவர் வழியாகவும் தொடர்பு கொள்ள முடியும், மேலும் இஸ்ரோ மையத்தில் இருந்து இருவழியாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது இஸ்ரோ.