சந்திர மேற்பரப்பினை அடைய 2 கி.மீ தூரம் இருக்கையில், லேண்டருடனான தொடர்பு இழக்கப்பட்டது, இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், ஏறக்குறைய 90% வெற்றி பெற்றது பெரும் மகிழ்ச்சியே என்று கருதினர்.
தற்போது அந்த லேண்டர் பற்றிய புகைப்படங்கள் தெரியவந்துள்ளன, அதாவது சந்திரனின் மேற்பரப்பில் உள்ள தடைகள் ஏதாவது சிக்னல்களைப் பெறுவதிலிருந்து லேண்டரைத் தடுத்திருக்கும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து அண்ணாதுரை கூறியது ” லேண்டர் இறங்கிய இடத்தில் உள்ள மேற்பரப்பின் காரணமாக, தரையிறக்கத்திற்கு போதுமானதாக லேண்டர் இருந்திருக்காது, இவையே இணைப்பை இழக்க செய்திருக்கும், என்றார்.
லேண்டரைக் கண்டறிந்த ஆர்பிட்டரில் உள்ள தகவல்தொடர்பு சேனல்மூலம் இணைப்பினை பெறச் செய்யலாம் என்று உறுதியளித்துள்ளார்.
ஆர்பிட்டருக்கும் லேண்டருக்கும் இடையில் இருக்கும் சில நிமிட தகவல் தொடர்பின் மூலம் இணைப்பினை பெற முயற்சிக்கலாம் என்றார்
இஸ்ரோ தலைமையகத்துடனான சந்திராயன்- 2 தொடர்பை இழந்தபோது, சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் மட்டும் இருந்தது.
இஸ்ரோவின் தலைவர் கே.சிவன், சந்திரனின் சுற்றுப்பாதையில் உள்ள ஆர்பிட்டரால் எடுக்கப்பட்ட படத்தின் மூலம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ளோம்,
லேண்டருடனான தொடர்பு 14 நாட்களில் நிறுவ முயற்சி செய்கிறோம் என்றும் சிவன் கூறியுள்ளார்ர்.