அனைத்து நெட்வொர்க்குகளும், 5 ஜியினை நோக்கிப் பயணிக்கையில், பிஎஸ்என்எல் 4 ஜியினை அடையவே வெகு காலம் பிடித்தது. இதனால் மற்ற நெட்வொர்க்குகள் பி.எஸ்.என்.எல்லை பின்னுக்குத் தள்ளியது.
இதனால் மற்ற நெட்வொர்க்குகளை நோக்கி வாடிக்கையாளர்கள் பயணிக்கத் தொடங்கினர். இதனால் அதிக அளவில் நஷ்டத்தினை சம்பாதிக்கும் மோசமான் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனால் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிவித்தது.
இந்த புதிய திட்டம் ஜனவரி 31ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது கட்டாய விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தின் மூலம் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் கடந்த மாதம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனால் நெருக்கடி நிலைமையானது ஓரளவு சமாளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி பிஎஸ்என்எலை தனியாருக்கு விற்பது குறித்து கேட்க, இந்த நிதி நெருக்கடி பிஎஸ்என்எல் தரப்பில் சரிசெய்யப்பட்ட அரசு வேண்டுவன அனைத்தையும் செய்து வருகிறது.
அதனால் தனியாருக்கு விற்பது என்ற முடிவு குறித்து யோசிக்க வேண்டிய தேவை இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.