Information Technology

29.1 மில்லியன் ரெஸ்யூம்களை திருடிய செர்பரஸ் வைரஸ்!!

கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்க மற்றொரு புறம் இணையதளங்களில் பலவகையான மோசடிகளை ஒரு வைரஸ் செய்து வருகின்றது. ஆமாங்க செர்பரஸ் வைரஸ் என்னும் பெயர் கொண்ட இந்த வைரஸ் பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான நிதி தரவுகளை பிரித்தெடுத்துக் கொள்கின்றது.

மேலும் இது ஆன்லைன் பணம் பரிமாற்றம் போன்ற செயலிகள் மூலம் பணம் திருடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா தொற்று விழிப்புணர்வுத் தகவல்களை எஸ்.எம்.எஸ் போல் இந்த வைரஸ் துவக்கத்தில் அனுப்புகிறது.

29.1 மில்லியன் ரெஸ்யூம்களை திருடிய செர்பரஸ் வைரஸ்!!

இந்த லிங்கினை நாம் கிளிக் செய்தால், மொபைலில் உள்ள மென்பொருள்கள் திருடப்பட்டுள்ளது, அதேபோல் 29.1 மில்லியன் பயனர்களின் ரெஸ்யூம்களை திருடியதோடு, அதனை டார்க் வெப்பில் இலவசமாக வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி வேலை தேடும் நபர்களின் ரெஸ்யூம்களுடன் அவர்கள் குறித்த பிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

29.1 மில்லியன் அளவிலான தனி நபரின் மொபைல் எண், மின்னஞ்சல், முகவரி, வேலைபார்க்கும் நிறுவனம், வேலை தொடர்பான அனுபவங்கள் போன்றவை வெளியாகி உள்ளதாக சைபர் கிரைம் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ஏதாவது கொரோனா குறித்த எஸ்.எம்.எஸ்கள் மொபைலுக்கு வரும்போது ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறப்பட்டு வருகின்றது.

Related posts

கூடுதல் கட்டணமில்லாமல் பே சர்வீஸ் சேனலை வழங்கத் திட்டமிட்டுள்ள டிஷ் டிவி!!

TechNews Tamil

கொரோனா ஊரடங்கு: ரூ. 10 இலவச டாக்டைம், இலவச இன் கம்மிங்க்.. சலுகைகளை இறைக்கும் பி.எஸ்.என்.எல்.

TechNews Tamil

மாணவர்களின் பேஸ்புக், ட்விட்டர் ஐடியை கண்காணிக்கவுள்ள மத்திய அரசு

TechNews Tamil