Mobile

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை வெளியிட்ட சிஇஓ!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ்7 குறித்த  விவரங்களை ரியல்மி சிஇஓ மாதவ்ஷெட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் ஆனது 6 அங்குல முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 2400 ×1080 பிக்சல்கள் தீர்மானத்துடன், மேலும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை வெளியிட்ட சிஇஓ!!

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹைரெஸ் ஆடியோ கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் குவாட் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா, முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 4300 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் மற்றும் 65 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

Related posts

சர்வதேச சந்தையில் ஜூன் 23 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் களம் இறங்கிய டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது விவோ நிறுவனத்தின் விவோ வை51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil