பான் எண் எனப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது டிசம்பர் 31 ஆம் தேதி என்று அறிவித்து இருந்தது.
ஆனால் அதற்குபின் இந்தக் காலக் கெடுவானது மீண்டும் நீட்டிக்கப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக் கெடுவானது டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கையாக வாக்காளர் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைக்க அரசாங்கம் முடிவெடுத்து இது குறித்து அறிவித்துள்ளது, அதாவது போலி வாக்காளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்.

போலியான வாக்காளர்களை இந்த நடவடிக்கை மூலம், எளிதில் கண்டறிய முடியும் என்பதால், தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகம் மற்றும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து இதனை செயல்படுத்த உள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக வாக்காளர் அட்டைகளை ஆதார் எண்களுடன் இணைக்கும்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.