Apps

Paytm இல் ரூ.2100 வரை கேஷ்பேக்!

Paytm தனது பயனர்களுக்கு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. Paytm பயனர்கள் செய்யும் அனைத்து QR ட்ரான்ஸாக்சனுக்கு ரூ.2,100 வரையிலான கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த கேஷ்பேக் சலுகையை பயனர்கள் பெற சில நிபந்தனைகளையும் Paytm விதித்துள்ளது. அதாவது வெளியான இந்த அறிவிப்புப்படி, பயனர்கள் Paytm ஆப்பில் உள்ள QR சேவையைப் பயன்படுத்தி தங்களின் ட்ரான்ஸாக்சன் செய்ய வேண்டும்.

QR சேவையின்படி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, இந்த ரூ.2100 கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று Paytm நிறுவனம் தெரிவித்துள்ளது.

Paytm இல் ரூ.2100 வரை கேஷ்பேக்!

UPI அடிப்படையிலான பயன்பாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்ட QR குறியீடுகளை, QR குறியீடு ஸ்கேனர் கொண்டு ஸ்கேன் செய்வதனால் பயனர்களை எளிதாக தங்களின் பணப் பரிவர்த்தனையைச் செய்துகொள்ள முடியும்.

QR குறியீடு அடிப்படையிலான சேவையின் மூலம் வரம்பற்ற பணப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளலாம் என்று தெளிவாக Paytm தெரிவித்துள்ளது.

Paytm இன் அறிக்கையின்படி, பயனர்கள் Paytm ஆப்பைப் பயன்படுத்தி அனைத்து இடங்களிலும் பணம் செலுத்தலாம்.

இதை செய்தால் நிச்சயம் கேஷ்பேக் கிடைக்காது QR குறியீடு அடிப்படையிலான ட்ரான்சாக்ஸன் அளவினைப் பொறுத்து பயனர்களுக்கு ரூ.2100 வரையிலான கேஷ்பேக் சலுகை வழங்கப்படும்.

மொபைல் எண்களைக் கொண்டு கட்டண செலுத்தினால் கேஷ்பேக் கிடையாது என்று Paytm தெரிவித்துள்ளது. 

Related posts

7 நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்

TechNews Tamil

ஜியோவில் ஈஸியா ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி.!

TechNews Tamil

250 பேருடன் க்ரூப் கால் பேசலாம்.. மைக்ரோசாப்ட் அறிவிப்பு!!

TechNews Tamil