Vivo Z1x இந்தியாவில் நேற்று செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. Vivo Z1x ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களாக இருப்பவை, 48 மெகாபிக்சல் சென்சாருடன் 3 பின்புற கேமரா அமைப்பு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 4,500mAh பேட்டரி, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகியவை ஆகும்.
Vivo Z1x ஸ்மார்ட்போன்களில் 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு வகை 16,990 ரூபாய் என்ற விலை நிர்ணயம் கொண்டதாக உள்ளது. 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு வகை 18,990 ரூபாய் என்ற விலை நிர்ணயம் கொண்டதாக உள்ளது.. மேலும் 8GB RAM வகை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இதன் விற்பனையில் ஆரம்பகால சலுகைகளாக எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகள் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 1,250 தள்ளுபடி வழங்கப்பட்டுவுள்ளது. இது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனுடன் கூடுதலாக 6,000 ரூபாய் வரை சலுகைகளும் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்கள் வரை கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லாத ஈ.எம்.ஐ.களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.