இரண்டு நாட்களுக்கு முன்பு நாசா தன்னுடைய மூன் லேண்டர் மூலமாக, இந்தியாவின் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் எங்கு உள்ளது என்பது குறித்த புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என்று இஸ்ரோ அறிக்கை செய்திருந்தது.
சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கும் பொழுது அதன் இணைப்பானது இழக்கப்பட்டது.
நாசாவின் மூன் ஆர்பிட்டர் அங்கு உள்ள நிலையில், அது விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பும் என்று நாசா இஸ்ரோவிற்கு நம்பிக்கை அளித்தது.

பல முயற்சிகளுக்குப் பின்னரும், நாசாவின் ஆர்பிட்டரால், விக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக, நிலவில் நீண்ட நிழல் காலம் நேற்று அதிகாலை துவங்கியுள்ளது. இதனால் நிலவின் பகுதிகள் இருளால் சூழப்பட்டுள்ளது. அதுவும் விக்ரம் லேண்டர் விழுந்துள்ள பகுதிகளில் அதிக இருள் சூழ்ந்துள்ளது.
இந்த நிழல் காலம் முடிந்த பின்னரே நாசாவின் ஆர்பிட்டரால் புகைப்படம் எடுக்கமுடியும் என்று கூறியுள்ளது.
இது இஸ்ரோவுக்கு பின்னடைவாக கருதப்பட்டாலும், இஸ்ரோ தன் பங்கிற்கு முயன்று வருகிறது குறிப்பிடத்தக்கது.