உலகம் முழுதும் அதிக பயனர்களைக் கொண்ட ஆப் ஃபேஸ்புக் ஆகும். ஃபேஸ்புக்கில் போட்டோ, வீடியோக்களை பகிர்வது மற்றவர்களுக்கு தகவலைத் தெரிவிக்க என்பதை தாண்டி, எவ்வளவு லைக்ஸ் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே தான் செய்கின்றனர்.
இதன்மூலம் அதிக அளவிலான சண்டைகளும் ஏற்படுகின், அப்படி என்னதா சண்டை என்று கேட்கிறீர்களா? அவரவர்க்கு பிடித்த ஹீரோவிலிருந்து ஸ்டார்ட் ஆகி கிரிக்கெட் வீரர் அனைவருடைய விருப்பமும் மாறுகிறது. இதன்மூலம் சின்ன சண்டைகள் கூட மாபெரும் பிரச்சினையாகிவிடுகிறது.

தற்போது ஃபேஸ்புக் இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது, இன்ஸ்டாகிராம்போல் ஃபேஸ்புக்கிலும் லைக்ஸ் எவ்வளவு என்பதை காட்டாத வண்ணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இனி ஒரு புகைப்படத்தை லைக் செய்தால், அது அந்த புகைப்படத்தை பகிர்ந்தவருக்கு மட்டுமே தெரியும். அதை லைக் செய்திருக்கும் மற்ற யாரையும் பார்க்க முடியாது. லைக் ஆப்சன் இருக்கும், ஆனால் எவ்வளவு பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்பதைமட்டும் மறைக்கப்பட்டிருக்கும்.
கனடாவில் இன்ஸ்டாகிராமில் இது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதே நடவடிக்கை தற்போது ஃபேஸ்புக்கிலும் எடுக்கப்படவுள்ளதாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.