Tecno நிறுவனம் டெக்னோ காமன் 16 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். டெக்னோ காமன் 16 ஸ்மார்ட்போன் 6.8′ இன்ச் எச்டி பிளஸ் 20.5: 9 விகிதம் கொண்ட 480 நைட்ஸ் பிரகாசம் உடைய 1640 x 720 பிக்சல்கள் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும் மேலும் இதனுடன் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரையில் Tecno Camon 16 ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் ஒரு AI லென்ஸ் உடன் குவாட்-கேமரா அமைப்புடன் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஆட்டோ ஐ போக்கஸ், வீடியோ பொக்கே, 2K கியூஎச்டி வீடியோ ஆதரவு மற்றும் நைட் போர்ட்ரெய்ட், சூப்பர் நைட் ஷாட், மேக்ரோ, பாடி-ஷேப்பிங், 10 எக்ஸ் ஜூம், ஸ்லோ மோஷன் போன்ற போன்ற சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
பேட்டரி அம்சத்தினைப் பொறுத்தவரை 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
Tecno Camon 16 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் HiOS 7.0 கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4 ஜிகாஹெர்ட்ஸ் + 5 ஜிகாஹெர்ட்ஸ்), புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, மைக்ரோ யூ.எஸ்.பி கொண்டுள்ளது.
விற்பனை இந்த புதிய Tecno Camon 16 ஸ்மார்ட்போன், அக்டோபர் 16ம் தேதி முதல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் விற்பனையின் மூலம் வெறும் ரூ.10,999 என்ற விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. குவாட் கேமராவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக Tecno Camon 16 இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.