பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் அவ்வப்போது பயனர்களுக்கு வியக்கத்தக்க அம்சங்களை வழங்கி வருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் வாட்ஸ்அப் வெப் பதிப்பில் டார்க் மோட் வசதி, வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் ஸ்டிக்கர்கள், கியூ ஆர் கோட் மூலம் காண்டாக்ட்களை சேர்க்கும் வசதி, வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடும் வசதி போன்ற அம்சங்களை வழங்கியது.
மேலும் அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வசதி வழங்கப்பட்டது. அதாவது ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு செயலிகளுக்கான பீட்டா வெர்ஷன் 2.20.12 மற்றும் ஐ.ஒ.எஸ். 2.2043.7 போன்ற வெர்ஷனில் டார்க் தீம் வசதி வழங்கப்படட்து.

ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவையை வழங்கி அது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில் வெப் சேவையில் காலிங்க் வசதியினை தற்போது வழங்கியுள்ளது.
அதாவது இந்த அம்சமானது தற்போது பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் முதல்கட்ட சோதனையினைத் தொடர்ந்து, விரைவில் அனைவருக்கும் இந்த வெப் காலிங்க் அம்சமானது கிடைக்கப் பெறும்.