வாடிக்கையாளர்கள் மற்றவர்களுக்கு கால் செய்யும்போது வழக்கமான காலர் டியூன் சில நாட்களாக கேட்பதில்லை, மாறாக இருமல் சத்தம்தான் கேட்கிறது. அந்த இருமல் சத்தத்தினைத் தொடர்ந்து கொரோனா குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறுந்தகவலாக ஒலிபரப்பாகிறது.

அதாவது பி.எஸ்.என்.எல். மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சாரமானது கால் செய்யும்போது கேட்கிறது, வோடபோன் மற்றும் ஐடியாவில் இந்த விழிப்புணர்வு விளம்பரம் விரைவில் ஒலிபரப்பாகும் என்று கூறப்படுகின்றது.
ஆனால் இந்த விளம்பரமானது மாநில மொழிகளில் ஒலிபரப்பாகாமல், ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிறது. தற்போது கொரானா வைரஸ் குறித்த காலர் டியூன்கள் மூலம் வரும் விழிப்புணர்வு செய்தியை தமிழிலும் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் பிரதமருக்கு இதுகுறித்த ஒரு கடிதத்தினை எழுதியுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “செல்போனில் கொரோனா குறித்து ஒலிபரப்பாகும் விழிப்புணர்வு விளம்பரம் பாராட்டத்தக்க விஷயமாகும். மேலும் இந்த விழிப்புணர்வானது ஆங்கிலத்தில் மட்டுமே ஒலிபரப்பாகி வருகிறது. இதனை தமிழில் ஒலிபரப்பினால் சிறப்பாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.