ஒரு வருடத்திற்குள் கால் ஆஃப் டியூட்டி கேம் உலகம் முழுக்க சுமார் 25 கோடி டவுன்லோட்களை கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சென்சார் டவர் நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது பப்ஜி போன்று சிறுவர்கள், இளைஞர்கள் என ஆண்ட்ராய்டு பிரியர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினைப் பெற்ற கேம்தான் கால் ஆஃப் டியூட்டி. இந்த கேம் ஆனது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் அறிமுகமானது.
அமெரிக்காவில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றதையடுத்து இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த கால் ஆஃப் டியூட்டி கேம் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மொபைல் கேமின் அனைத்து வெர்ஷன்கள், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது
உலக அளவில் கணக்கிட்டுப் பார்க்கையில் இந்த கால் ஆஃப் டியூட்டி கேம் ஆனது அமெரிக்கா மற்றும் இந்தியாவில்தான் அதிகப்படியான டவுன்லோட்களை கடந்து உள்ளதாக சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் இந்தியாவும், 3 வது இடத்தில் பிரேசிலும் இடம்பெற்றுள்ளது.