அனைத்திந்திய டிஜிட்டல் கேபிள் சங்கம் கேபிள் டிவி தொடர்பாக பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதாவது பழைய கட்டணத்தில் பல கூடுதல் சேனல்கள் கிடைக்கவுள்ளது, அதாவது என்.சி.எஃப். கட்டணம் மூலமாக ஏற்கனவே கிடைக்கும் சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதாவது அதிக அளவில் வாடிக்கையாளர்களை பெறவேண்டும் என்ற முனைப்பிலே இது செயல்பட்டு வருகிறது.
பொதுவாக கேபிளுக்கு செலுத்தப்படும் நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனும் ரூ.130 கட்டணத்தின் மூலம் 100 சேனல்களை மட்டுமே பார்க்க இயலும். தற்போது அந்த சேனல்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 130 ரூபாயுடன் கூடுதலாக ரூ.23 ஜிஎஸ்டியை சேர்த்து செலுத்தி, ரூ.153க்கு 100 சேனல்கள் பெற முடியும்.
இலவசமாக ஒளிபரப்பப்படும் சேனல்களின் எண்ணிக்கையும் 100 இல் இருந்து 150 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் சில பிளான்களுக்கு கூடுதல் சலுகைகளும் கிடைக்கவுள்ளது. அதனை கேபிள் டிவி இணையதளத்தின்மூலம் அறிந்துகொள்ளலாம்.