Mobile

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்-ன் புதிய மதுரம் ப்ரீபெய்ட் திட்டம்

பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்)  நீண்ட கால வேலிடிட்டி கொண்ட புதிய 1,188 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய 1,188 ரூபாய் மதுரம் ப்ரீபெய்ட் வவுச்சர் திட்டம், தமிழ்நாடு அரசு நடத்தும் டெல்கோ நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

 இந்த புதிய திட்டம் ஜூலை 25 தேதியிலிருந்து அறிமுகமானது. 345 நாட்கள் வேலிடிட்டியை கொண்டு இந்த திட்டம் குறைந்த டேட்டா சலுகைகளை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டம், ஆந்திராவில் 1,399 ரூபாய் என்ற விலையிலும் மற்றும் தெலுங்கானா 1,001 ரூபாய் என்ற விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய ஒரு வாரத்திலேயே அறிமுகமாகியுள்ளது.

தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்-ன் புதிய மதுரம் ப்ரீபெய்ட் திட்டம்

புதிய பி.எஸ்.என்.எல் 1,188 ரூபாய் மதுரம் திட்டம்  5GB டேட்டா, மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட நாடு முழுவதும் இலவச அழைப்புகள் மற்றும் 345 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் 1,200 மெசேஜ்களை இலவசமாக வழங்குகிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

இந்த திட்டம் தமிழ்நாட்டில் நேரலையில் உள்ளது, இந்த திட்டத்தின் 5GB டேட்டாவை பயன்படுத்திய பிறகு, பிஎஸ்என்எல் பயனர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு MB டேட்டாவிற்கும் 25 பைசா வசூலிக்கப்படும்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட கால வேலிடிட்டி கொண்ட 1,399 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் 1.5GB தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 50 மெசேஜ்கள் மற்றும் 270 நாட்களுக்கு அளவற்ற தொலைபேசி அழைப்புகள் ஆகிய சலுகைகளை வழங்குகிறது.

Related posts

சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியீடு!!

TechNews Tamil

ஜனவரி 9 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ரியல்மி 5ஐ!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil