ரூ.1,199/- மதிப்புள்ள Family Combo Plan. இது வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் மற்றும் மொபைல் நெட்வொர்க் என இரண்டு சேவைகளையும் வழங்கும் ஒரு திட்டமாகும்.
இதுபோன்ற இரட்டை நன்மைகளை வழங்கும் ஒரு திட்டம் ரிலையன்ஸ் ஜியோவிடம் இல்லை. அதுதான் Family Combo திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.
பிரிட்டனில், வோடபோன் நிறுவனம் ஒரு திட்டத்தின் கீழ் மூன்று சேவைகளை வழங்குகிறது – மொபைல் நெட்வொர்க், பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில், பி.எஸ்.என்.எல் மட்டுமே அத்தகைய சேவையை வழங்கி வருகிறது.
பிபிஜி காம்போ யுஎல்டி ஃபேமிலி 1199 பிளான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டமாகும், ஆனால் 10 எம்.பி.பி.எஸ் வேகத்திலான 30 ஜிபி என்கிற மாதாந்திர தரவு வரம்பினை கொண்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் 30 ஜிபி என்கிற வரம்பை தாண்டினால், பதிவிறக்க வேகமானது 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் மற்றும் குஜராத் வட்டங்களை தவிர இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் கிடைக்கும் இந்த திட்டம், நாட்டிலுள்ள எந்தவொரு நெட்வொர்க்கு உடனான வரம்பற்ற லேண்ட்லைன் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நீங்கள் மூன்று மொபைல்களை இணைக்கலாம். இவை அனைத்தும் எந்தவொரு நெட்வொர்க்கு உடனான இலவச வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை உங்களுக்கு வழங்கும். உடன் மூன்று சிம்களுக்கும் 40 ஜி.பி.பி.எஸ் வேகத்திலான (தலா) 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். மூன்று சிம்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோனும் (பிஆர்பிடி) அணுக கிடைக்கும்.