ஜியோ நிறுவனம் தற்போது, அவுட் கோயிங்க் கட்டணங்களை அறிவிக்க வாடிக்கையாளர்கள் கடுப்பாகிப் போய் உள்ளனர்,
3 வருட காலமாக அனைத்து ஆஃபர்களையும் அறிவித்து, அனைவரையும் தனது நிறுவன எண்களில் இருந்து பிற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கான கட்டணத்தை தற்போது அறிவித்து பெரிய அளவிலான அதிருப்தியினை சம்பாதிக்கிறது.

இந்தநிலையில் மற்ற நெட்வொர்க்குகள் பதிலடியாக ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன், ஏர்டெல் ஐடியா நிறுவனங்கள், அதிக அளவிலான ஆஃபர்களை வெளியிட்டு வருகின்றன.
இந்தவகையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ஐந்து நிமிட குரல் அழைப்புகளுக்கும் ஆறு
பைசா கேஷ்பேக்குகளை வழங்குவதாக
அறிவித்துள்ளது.
இது வயர்லைன், பிராட்பேண்ட் மற்றும் எஃப்டிடிஎச்
வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
ஜியோவுக்கு இது பதிலடியாக
இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். ஜியோவின் அவுட்கோயிங்கால் கடுப்பாகிப் போன
வாடிக்கையாளர்கள் இந்த அதிரடி சலுகையால் ஆடிப் போய் உள்ளனர்.