தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்ற நெட்வொர்க்குகளுக்கு டஃப் காம்பிட்டிஷன் கொடுத்து வருகின்றது.
டிராய் சமீபத்தில் கொண்டுவந்த விதிகளின்படி ஜியோ, வோடபோன், ஏர்டெல், ஐடியா என அனைத்தும் அதன் அவுட் கோயிங்க் காலுக்கான கட்டணத்தை உயர்த்தியது. ஆனால் பிஎஸ்என்எல் மட்டும் வாடிக்கையாளகளைக் கவர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அவுட் கோயிங்க் காலுக்கான கட்டணங்களில் சலுகைகளை அறிவித்தது.
இதுவரை 4 ஜியில் கால் பதிக்காமல் இருந்துவந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4 ஜியினை நோக்கி தயாராகி உள்ளது.

தற்போது இந்த பிஎஸ்என்எல் 4 ஜி சேவையானது, மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது 20 வட்டங்களிலும் பயனுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் மட்டுமே அமலில் உள்ள இந்த சேவையினை மார்ச் 1 ஆம் தேதி முழுவதுமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.