Information Technology

திடீரென வேலிடிட்டியினைக் குறைத்த பிஎஸ்என்எல்!

டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் போன்றவை சமீபத்தில் அதன் கட்டணங்களை உயர்த்தின. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது கேரள மாநிலத்தில் தனது பிரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டியினைக் குறைத்துள்ளது.

அதாவது ரூ.118, ரூ.187, ரூ.399 என்ற இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது ரூ.118 திட்டம் 28 நாட்களில் இருந்து 21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினைப் பொறுத்தவரை தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 0.5ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100எஸ்எம்எஸ் போன்றவை கிடைக்கிறது.

திடீரென வேலிடிட்டியினைக் குறைத்த பிஎஸ்என்எல்!

மேலும் ரூ.187 திட்டத்திலும் வேலிடிட்டி காலமானது 28நாட்களில் இருந்து 24 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இந்த திட்டத்தில் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 3ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100எஸ்எம்எஸ் போன்றவை கிடைக்கிறது..

மேலும் ரூ.153 திட்டத்திலும் வேலிடிட்டி காலமானது 28நாட்களில் இருந்து 21 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது,

அடுத்து ரூ.399 திட்டத்திலும் வேலிடிட்டி காலமானது 80 நாட்களில் இருந்து 65 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது,  டேட்டா அளவானது 1ஜிபியில் இருந்து 2ஜிபியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100எஸ்எம்எஸ் போன்றவை கிடைக்கிறது..

Related posts

விருப்ப ஓய்வுக்கு ரெடியான 75000 பிஎஸ்என்எல் ஊழியர்கள்!!

TechNews Tamil

வேலிடிட்டியினை குறைத்த ஜியோ… கடுப்பில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

டிஷ்டிவியின் மூலம் இனி அமேசான் ப்ரைம் வீடியோக்கள்!

TechNews Tamil