Information Technology

3 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிளானை நீட்டிப்பு.!

ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம், தனது பிளான்களை மாற்றி வாடிக்கையாளர்களை கவர் முடிவு செய்துள்ளது. அதாவது மருதம் பிளானை 90 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

அதாவது ரூ.1,188   க்கு இந்த பிளானை அறிமுகம் செய்து, அதிக அளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தினை பெற்றுள்ளமையால், 2020 ஜனவரி 21 வரை திட்டத்தை நீட்டித்துள்ளது.

3 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் பிளானை நீட்டிப்பு.!

இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் இதனை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், மேலும் இது புதிய வாடிக்கையாளர்களை கவரும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

அன்லிமிடெட் கால், 5 ஜிபி டேட்டா மற்றும் 1200 எஸ்எம்எஸ் 345 நாட்களுக்கு என்பது இந்த பிளானின் அம்சமாகும்.

ரூ .1,699 ப்ரீபெய்ட் திட்டம் மருதம் திட்டத்துடன் ஒப்பிடும்போது FUP வரம்பும் இல்லாமல் அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 3.5 ஜிபி தரவு மற்றும் 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைப் பொறுத்தவரை ரூ .1,149 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு 250 நிமிட கால்ஸ், 12 ஜிபி தரவு மற்றும் 365 நாட்களுக்கு 1000 எஸ்எம்எஸ் போன்றவற்றினை  வழங்குகிறது.

Related posts

முடியவே முடியாது.. வோடபோனின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்!!

TechNews Tamil

இனி 3 நாள்களில் போர்ட்டபிலிட்டி- விதிகளைத் திருத்திய டிராய்!!

TechNews Tamil

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் நீக்கம் – கூகுள் முடிவு

TechNews Tamil