பிஎஸ்என்எல் நிறுவனம், தனது பிளான்களை மாற்றி வாடிக்கையாளர்களை கவரமுடிவு செய்துள்ளது. அதன்படி மருதம் பிளானை மேலும் 20 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
அதாவது ரூ.1,188 க்கு இந்த பிளானை அறிமுகம் செய்து, அதிக அளவில் வாடிக்கையாளர்களின் கவனத்தினை பெற்றுள்ளமையால், 2020 ஜனவரி 21 வரை திட்டத்தை நீட்டித்திருந்தது.
அன்லிமிடெட் கால், 5 ஜிபி டேட்டா மற்றும் 1200 எஸ்எம்எஸ் 345 நாட்களுக்கு என்பது இந்த பிளானின் அம்சமாகும். தற்போது இந்த 345 நாட்களுடன் கூடுதலாக 20 நாட்கள் சேர்க்கப்பட்டு, 365 நாட்களாக வழங்கப்படுகிறது.

2020 ஜனவரி 16 ஆம்
தேதிக்குள் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
வாடிக்கையாளர்கள் பலரும் இதனை உபயோகிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், மேலும்
இது புதிய வாடிக்கையாளர்களை கவரும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.