பி.எஸ்.என்.எல் நிறுவனம், நேற்று வாடிக்கையாளகளுக்கு தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது.
தீபாவளி சலுகையாக ரூ.1,699 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 455 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி காலம் 365 நாட்களாக இருந்தது.
இது தற்போது ஆஃபர்களுடன் ரூ.106 மற்றும் ரூ. 107 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ.186 மற்றும் ரூ.187 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் இந்த தீபாவளி சலுகையில் அடங்கும்.

ரூ.1,699 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தினைப் பொறுத்தவரை, 2 ஜிபி அளவிலான தினசரி டேட்டா, அன்லிமிடேட் கால் மற்றும் 100 தினசரி
எஸ்எம்எஸ் போன்றவைகள்
அடங்கும்.
பி.எஸ்.என்.எல் ரூ.106 மற்றும் ரூ.107 ப்ரீபெய்ட்
திட்டங்களில் தினசரிக்கு 1 ஜிபி
டேட்டா மற்றும் அன்லிமிடேட்
கால் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 24 நாட்கள்
ஆகும்.
ரூ.186 மற்றும் ரூ.187 திட்டங்களில் தினசரிக்கு 3 ஜிபி
அளவிலான டேட்டா என்கிற கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. அன்லிமிடேட் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள்
ஆகும்.