பிஎஸ்என்எல் நிறுவனம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல 90 ஜிபி டேட்டா ஆகும்.
என்ன 90 ஜிபி டேட்டாவா? ஓணம் ஸ்மார்ட் பிளான் என்ற ஸ்பெஷல் ரீசார்ஜ் பிளானை அனைவரும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்த தேடும்போது தெரிந்த விஷயம் இது கேரள வாடிக்கையாளருக்கு மட்டுமே பொருந்தும் என்பதாகும்.

ரூ.234-க்கு வழங்கப்படும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி வரம்பில்லாத 90 ஜிபி அளவிலான டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன், 100 எஸ்எம்எஸ், 250 நிமிட அன்லிமிடேட் இலவச வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைப் பெற செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் PLAN <space> SMART என டைப் செய்து 123 எனும் எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் *444*234# என்கிற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.