Information Technology

Work@Home ஊழியர்களுக்கு 5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸால் இதுவரை 2,74,643 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 11,366 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.

சீனாவைத் தாண்டி இத்தாலி, பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையினை அமலுக்குக் கொண்டுவர அறிவுறுத்தியதை அடுத்து, ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

Work@Home  ஊழியர்களுக்கு 5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

இவர்களுக்கு சரியான அளவில் இணைய வசதி கொடுக்கும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது பி.எஸ்.என்.எல்.லின் இந்த சலுகையானது Work@Home  என்று அழைக்கப்படுகிறது. இந்த சேவையானது தினமும் 5 ஜி.பி. டேட்டா நொடிக்கு 10 எம்.பி. வேகத்திலும், 5 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி. வேகத்தில் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த Work@Home  சேவையானது கட்டணம் ஏதும் இல்லாமல், இலவசமாக வழங்கப்படுகிறது.

Related posts

ஆன்லைன் மூலம் பான் கார்டு வழங்க ஏற்பாடு!

TechNews Tamil

ஏ.சி.டி அறிமுகப்படுத்தவுள்ள ஸ்டீரிம் டிவி 4கே!!

TechNews Tamil

குழந்தைகளுக்கு ஏற்ற இறக்கைகளே இல்லாத மின்விசிறி!

TechNews Tamil