பி.எஸ்.என்.எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும்
விதமாக பல புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, ஏற்கனவே
உள்ள ரூ.186 மற்றும் ரூ.187 பிளான்களில் புதிதாக மாற்றம்
கொண்டு வந்துள்ளது.
பழைய பிளான்:
இதற்கு முன்பு வரை
பி.எஸ்.என்.எல்லில் 186 மற்றும் 187 ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்தால், தினமும் 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடேட்
வாய்ஸ்கால், லோக்கல், எஸ்டிடி, ரோமிங்
ஆகியவை வழங்கப்பட்டது. மும்பை மற்றும் டெல்லிக்கு ரோமிங்
கிடையாது. மேலும், தினமும்1ஜிபி
மொபைல் டேட்டா வழங்கப்பட்டது. 1ஜிபி காலியானதும் டேட்டா வேகம் 40Kbps
ஆக குறைக்கப்பட்டது.

புதிய பிளான்:
பழைய பிளானில் 1ஜிபி
டேட்டா மட்டுமே இன்டெர்நெட் சேவை வழங்கப்பட்டது. தற்போது இந்த டேட்டா அளவு
இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இனி 186 அல்லது 187 ரூபாய்
பிளானில் ரீசார்ஜ் செய்தால், தினமும் 2ஜிபி
டேட்டா பெற முடியும். இந்த டேட்டா காலியானதும் இணையத்தின் வேகம் 40
Kbps ஆக குறைக்கப்படும். இதே போல், பழைய
பிளானில் மும்பை, டெல்லி ஆகியவற்றில் ரோமிங்
கிடையாது. தற்போது இந்த இரு ரோமிங்கும் வழங்கப்படுகிறது.
என்னதான் மாற்றம்?
187 ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்தால், PRBT எனப்படும் காலர் பேக் ரிங் டோன்
வழங்கப்படுகிறது.