ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.
தற்போது ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபர்களை அளித்து வருகிறது, அந்த வகையில் பிஎஸ்என்எல் அனைவருக்கும் பிடித்த ஒரு நெட்வொர்க்காக மாறி வருகிறது.
தற்போது இது இந்தியாவில் புதிய ரூ. 997 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 3 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் கால், தினசரி SMS மற்றும் 180 நாட்கள் செல்லுபடி போன்றவற்றை வழங்குகிறது.

ஏர்டெல்லின் ரூ. 998 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வோடபோன் மற்றும் ஜியோவின் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டங்கள் இனி இந்தத் திட்டத்தினால் பின்னடைவினை சந்திக்கும்.
ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும், பிஎஸ்என்எல் இன் இந்த்த் திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக உள்ளது.
3 ஜிபி தினசரி அதிவேக டேட்டா கிடைக்கும். மேலும், FUP முடிந்த பின்னர், வேகம் 80Kbps ஆகக் குறைக்கப்படும்.
கூடுதலாக, ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளைக் கொண்டுவருகிறது. இது 180 நாட்கள் செல்லுபடியாகும்.
மேலும் இது 2 மாதங்களுக்கு பிஆர்பிடி பலன்களையும் வழங்குகிறது.