ஜியோ அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணம் அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு நெட்வொர்க்கும் முடிந்த அளவில் சலுகைகளை வாரி இறைத்து வருகிறது.
தற்போது ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபர்களை அளித்து வருகிறது, அந்த வகையில் பிஎஸ்என்எல் அனைவருக்கும் பிடித்த ஒரு நெட்வொர்க்காக மாறி வருகிறது.
தற்போது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

அதாவது ரூ.99 மற்றும் ரூ.365 என 2 புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து அனைவருக்கும் ஷால் கொடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.99 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவானது 18நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் ஒரு நாளைக்கு 250 நிமிட இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது.
மற்றொரு பிளானான ரூ. 365 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா ஆனது 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் ஒரு நாளைக்கு 250 நிமிட இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது.