Information Technology

பழைய பிளானை புதுப்பித்த பி.எஸ்.என்.எல்.

ஜியோவின் ஆஃபர்களுக்கு ஈடுகொடுக்க மற்ற நெட்வொர்க்குகள் வேறு வழியில்லாமல், அதிரடியான ஆஃபர்களை வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதிரடியான பல ஆஃபர்களை புதிதாக கொண்டுவரும் நிலையில், தனது  பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 777 மதிப்பிலான பழைய பிளானை வழங்க  உள்ளதாக தெரிவித்துள்ளது.

பழைய பிளானை புதுப்பித்த பி.எஸ்.என்.எல்.

இது பலருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது. ஜியோஃபைபர் சேவை அறிவிக்கப்பட்ட பின்னர் இருந்தே பி.எஸ்.என்.எல். ஆஃபர்களில் ஜியோவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிக அளவில் சலுகைகள் கொண்ட பிளான்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பிளானில் மாதம் 500 ஜி.பி. டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை முடியும் பட்சத்தில், டேட்டா வேகம் 20Mbps ஆக குறையும்.

மேலும் இந்த ஆஃபரானது அந்தமான் மற்றும் நிகோபார் தவிர மற்ற அனைத்து வட்டாரங்களில் இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இதில் ஒரு நிபந்தனையும் உண்டு, அதாவது பி.எஸ்.என்.எல். ரூ.777க்கு இந்த சலுகையினை 6 மாதங்களுக்கு வழங்குகிறது.

அதன்பின் அந்த பிணானை ரூ. 849 செலுத்தி மட்டுமே தொடர முடியும் என்பதாகும்.

Related posts

ஆஃபர்களை அள்ளித்தரும் ஏர்டெல்!!!

TechNews Tamil

தினமும் 375ஜிபி வழங்கவுள்ள பிஎஸ்என்எல் இன் புதிய பிளான்.!

TechNews Tamil

29.1 மில்லியன் ரெஸ்யூம்களை திருடிய செர்பரஸ் வைரஸ்!!

TechNews Tamil