தொலைதொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றைக்கான நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. ஆதலால் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடனடியாக ரூ. 92,000 கோடியை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
நிலுவை தொகையை செலுத்தும் அளவு தங்களிடம் பணம் இல்லாததால், தொலைதொடர்பு நிறுவனங்கள் கால அவகாசம் கேட்டனர்.
இதனால் உச்சநீதிமன்றம் இந்த நிறுவனங்களுக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது, அதாவது நிலுவைத் தொகையை செலுத்த மார்ச் 2022 வரை அவகாசம் அளித்துள்ளது.

இதனால் இந்த நிலுவைத் தொகையினை செலுத்த அனைத்து நெட்வொர்க்குகளும் என்ன செய்வதென்று பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
அந்தவகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது சேவை கட்டணங்களை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
எவ்வளவு உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை. சமீபத்தில்தான் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதியம் கொடுத்து, ஓரளவு நஷ்டத்தினை ஈடுசெய்தது குறிப்பிடத்தக்கது.